பெயரிடுதல்

சற்றே மெலிந்த சாரல் பூத்த மாலையில்
தேநீரின் முதல் ஸ்பரிசத்திற்கு
முந்தைய இறந்தகாலத்திற்கும்
கடைசி மிடறுக்குப் பிந்தைய
எதிர்காலத்திற்கும் இடையே
உறையும் மெளனத்தில்
சிறிது வாழ்ந்துவிட்டு வருதலையே
நிகழ்காலமென பெயரிட்டால் என்ன?

Like to have your reply here..

Website Powered by WordPress.com.

Up ↑