மழை நனைவதற்கே

சிறுதூறல் சிறிதாய் தொடங்குகையில்
துளிநீர் தெறிக்காமல் ஒதுங்குகிறீர்கள்

மழைத்துளியின் ஸ்பரிசத்தில் பதற்றமாய்
உடற்கவசம் எடுத்து அணிந்திருப்பீர்கள்

குடையென்னும் பலவண்ண ஆயுதமேந்தி
மழையின்று தப்பித்ததாய் மகிழ்ந்திருப்பீர்கள்

இன்றேல் தாழ்வாரத்தில் அமர்ந்து
மழைநீருடன் தேனீர் அருந்தியிருப்பீர்கள்

இன்றுமட்டுமேனும் மழையின் கைப்பிடித்து
கண்ணாமூச்சி விளையாடித்தான் பாருங்களேன்
இறங்கி வரக்கூடும் உங்கள் பால்யம்

Like to have your reply here..

Website Powered by WordPress.com.

Up ↑