மீட்சியடைந்த இரவு

அவள் அவனாகிவிட்ட​
அவன் அவளாகிவிட்ட​
ஒரு தேடலின் தருணத்தில்
காதலின் அரசன் காதலின் அரசியின்
இரவை நிறைக்க​ ஆரம்பித்தான் சிறுகேள்விகளால்

“உன் காதலின் வெப்பம் என்னை என்ன​ செய்யும்?”

“உன் கிரீடத்தில் மின்னும் நட்சத்திரம்  என் வெப்பமே”

“அப்படியென்றால் நீ என் தாகம் தணிக்கும் நீர் இல்லையா?”

“உன் தணியா தாகத்தின் வெப்பத்தில் வெள்ளமாவேன்; அணை உடைப்பேன்”

“வெள்ளம் ஆழி சேர்ந்துவிடுமே; கரை ஒதுங்கிய​ நான் என்னாவேன்?”

“ஆழி நானாகும்போது கவலை ஏன்? காதலைப் பற்றிக்கொண்டு முத்துக்களைத் தேடத் தொடங்கு”

சிறுபிள்ளைபோல் காதலை அள்ளியெடுத்த​ காதலால்
மீட்சியடைந்தது அவ்விரவு..

2 thoughts on “மீட்சியடைந்த இரவு

Add yours

Like to have your reply here..

Website Powered by WordPress.com.

Up ↑